மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை என்ற கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற பழமையான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான இந்த ஆலயம் இறைவன் மீது காமன்  கனைகளை தொடுத்த போது அவனை நெற்றிக் கண்களால் எரித்து மீண்டும் உயிர்பித்த ஆலயம் இது வென்று புராண வரலாறுகள் கூறுகின்றன. 




64 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்:


இந்நிலையில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 64 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த ஒன்றாம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை ஐந்து கால பூஜையில் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து காலை ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க புனித கடங்கள் ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 


கோலாகலமாக நடந்த மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..




பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீன மடாதிபதி,  செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட மயிலாடுதுறை மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.