மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் பிரசித்தி பெற்ற அன்னை அஜ்மத் பீவி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா கொடியேற்றும் விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில்  82வது ஆண்டு கந்தூரி விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு, முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் வருகிற ஜனவரி 29 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு திங்கட்கிழமை அதிகாலை காலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. 




சந்தனம் பூசும் வைபவத்தில் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெறும். இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்பாளர்கள். மேலும் இவ் விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிட்டத்தக்கது.