கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர் அதைத் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சமர்ப்பித்து தங்களது நேர்த்திக்கடனை சிறப்பாக செய்தனர்.




ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை காந்திகிராமம் மகா மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மன் கம்பத்திற்கு தீர்த்த குடம், பால்குடம் மற்றும் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர்.




குறிப்பாக கரூர் மாரியம்மன் உலக புகழ்பெற்ற திருவிழா என்பதால் இந்த வைகாசி மாத திருவிழாவிற்கு கரூர் மட்டும் அல்லாது அருகில் உள்ள திருச்சி, நாமக்கல் ,திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் கரூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆலயம் அருகே புறநகர் காவல் நிலையம் அமைத்து பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.இதைத்தொடர்ந்து வருகின்ற வாரம் திங்கள், செவ்வாய், புதன் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் அக்னி சட்டி, அழகு உள்ளிட்ட நேர்த்திக்கடன் செய்ய இருப்பதால் இன்று முதல் பக்தர்கள் ஆலயத்தில் கங்கணம் கட்டிக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.