குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் பகவதி அம்மன்,  விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement


 




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ பகவதி அம்மன், விநாயகர் வீரம்மாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் குடமுழுக்கு விழா நடத்துவது என்று முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து காலை குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.


முன்னதாக கடந்த மே 20ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்சாபந்தனம், நாடி சந்தனம் திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட நான்கு கால யாக வெளியே பூஜைகளை செய்தனர்.


 




 


 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.


அதனை தொடர்ந்து கலசத்திற்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள்நடைபெற்றன. இதில் கட்டாணி மேட்டை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


 




 


குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண