தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் அன்று புனித தீர்த்தங்களில் நீராடவும், முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம். அதேபோன்று மாசி மகம் அன்றும், புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். 




ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோன்று மாசி மகதன்றும் வழிபாடு நடைபெறுகிறது.


Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி 2024! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் - எந்தெந்த ராசி?




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை, மாசி மகம் போன்ற நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு ஏராளமானோர் படை எடுப்பார்கள். மேலும் இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.  


Kachchatheevu: கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த தமிழக மீனவர்கள்! களையிழந்த அந்தோணியார் ஆலய வைபவம்!




இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.  




அதன்படி மயிலாடுதுறையில் புகழ் பெற்ற புனித காவிரி ஆற்றின் துலா கட்ட தீர்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடில் ஈடுபட்டனர். தற்போது காவிரி துலாக்கட்டத்தில் காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் புனித புஷ்கர தொட்டியில் மின் மோட்டார் மூலம் விடப்பட்ட சிறிய தண்ணீரில் பொதுமக்கள் நீராடி வழிபாடு செய்தனர். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் செல்லாத காரணத்தால் வழிபாடு தடைபெறு என்றும், இதனால் மாவட்ட நிர்வாகம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என நமது ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இன்று மாசி மகம் வழிப்பாட்டிற்காக மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வசதி செய்து தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.