கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் மார்கழி பௌர்ணமி பூஜை

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பௌர்ணமி பூஜை சாமிக்கு சிறப்பு அலங்காரம்.

Continues below advertisement

மார்கழி மாத பௌர்ணமி ஒட்டி பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம் அபிஷேக பொடி, அரிசி மாவு, குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

Continues below advertisement


அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத பௌர்ணமி பூஜையை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


குளித்தலை அருகே கார்ணாம்ம்பட்டியில் சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கரூர் மாவட்டம் குளித்தலை வடசேரி கார்ணாம்பட்டி ராஜீவ் நகரில் ஸ்ரீ சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து எடுத்தனர்  தற்போது கோவில்  பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.


புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 2 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் மூலமாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். வேத மந்திரங்கள் மூலம் புனித நீரை கலசத்திற்கு ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழா மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கலையரசன் தலைமையிலும், திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு முன்னிலையில் நடைபெற்றது.

Continues below advertisement
Sponsored Links by Taboola