மார்கழி மாதம் இன்று தொடங்கியதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாதப்பிறப்பு வழிபாட்டை தொடங்கினார். 




மார்கழி மாதம் 30 நாட்களும் தினசரி ஒரு கோயிலில் வழிபாடு மேற்கொள்வதை தருமபுரம் ஆதீனம் வழக்கமாக கொண்டுள்ளார். அவகையில் இன்று மாயூரநாதர் கோயிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பசு, குதிரை மற்றும் ஒட்டகம் ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, கோயிலில் மாயூநாதர் சன்னதி, அபயாம்பிகை சன்னதி மற்றும் சுப்பிரமணியர் குமார கட்டளையில் ஆதீனம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து குமரகட்டளை மடத்தில் அவர் கொலு காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


சீர்காழி சட்டநாதர் கோயில் தமிழ் மாத பிறப்பு சிறப்பு வழிபாடு.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு  சொந்தமான பழமையான சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகும். இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தனுர் மாதம் எனும் மார்கழி  மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.




முன்னதாக கொடிமரம் அருகே எழுந்தருளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் கொடிமர நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு மற்றும் கன்று சிறப்பு பூஜைகள் செய்து கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.  இதேபோல் பிரம்ம தீர்த்த குளக்கரை அருகே உள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Priya Atlee Pregnant: ‘நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்’- அப்பாவாகப்போகும் அட்லீ.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி போஸ்ட்!