108 திவ்ய தேசங்கள்


திவ்ய தேசம் என்பது 108 வைணவ திருக்கோயில்களை குறிக்கும். இக்கோவில்கள் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவ திருக்கோயில்களாக கருதப்படுகிறது. இந்த வைணவ கோயில்களில் வழிபாடு நடத்துவது மிகச் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.  வைணவ சமயத்தை பின்தொடர்பவர்கள், இந்த கோவில்களை மிக பிரசித்தி பெற்ற கோவில்களாக கருதுகின்றனர். இவற்றில் 105 கோவில்கள் இந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் 63-வது திவ்ய தேசமாக உள்ள கோவில், "திருக்கடல்மல்லை" என அழைக்கக்கூடிய அருள்மிகு ஸ்தல சயனப்பெருமாள் பெருமாள் கோயில். இங்கு ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்  ஆகியோர்   பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.  27 பாசுரங்கள் பாடல் பெற்ற கோவிலாக இது விளங்குகிறது.


 


ஸ்தல சயனப்பெருமாள்   பெருமாள் கோயில்  புராண வரலாறு


இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம்  கடற்கரை ஒரு காலத்தில், மிகப்பெரிய காட்டுப்பகுதியாக இருந்துள்ளது.  இந்த காட்டுப் பகுதியில் புண்டரீக மகரிஷி  பல ஆண்டுகாலம் தவம் புரிந்து வந்துள்ளார்.  திருமாலை நினைத்து இவர், இந்த காட்டுப் பகுதியில் தவம் புரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  ஒரு நாள் அருகே இருந்த குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை  பறித்து,  திருப்பாற்கடலில்  பள்ளி கொண்டுள்ள  திருமாலின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்துள்ளார்.




பூக்களை பறித்து கொண்டு செல்லும் பொழுது குறுக்கே கடல் இருந்துள்ளது. தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக இருக்க ஆரம்பித்துள்ளார்.  கடல் நீரை இறைப்பது அவ்வளவு சுலபமா என்ன ?  ஆனாலும் திருமால் மீது  நம்பிக்கையில் கடல் நீரை கையால் இறைத்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக இதையே செய்துள்ளார்.  


கடல் நீர் வட்டட்டும்


ஒரு நாள்  "பரந்தாமா நான் கொண்ட பக்தி  உண்மை என்றால், இந்த கடல் நீர் வட்டட்டும் எனக்கு பாதை கிடைக்கட்டும், அதுவரை இந்த பூவும் வாடாமல் இருக்கட்டும் என திருமாலிடம் வேண்டியுள்ளார். இந்த நிலையில், முனிவர் முன் ஒரு முதியவர் தோன்றியுள்ளார். அந்த முதியவர்   மகரிஷியிடம் வம்பு இழுத்துள்ளார். அதன் பிறகு எனக்கு  உணவு வேண்டும் என கேட்டுள்ளார். மகரிஷியும் நான் என்றோ ஒரு நாள் இந்த கடல் நீரை வற்றவைத்து பெருமாளை காண்பேன்.




இப்பொழுது உனக்காக உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் அந்த பணியை தொடர்வேன் என கூறிவிட்டு அதுவரை என்னுடைய மலர்களை நீ கையில் வைத்திரு என அந்த, தாமரை மலர் கூடையை கொடுத்து விட்டு சென்றுள்ளார். முதியோருக்காக உணவு எடுக்கும் சென்ற மகரிஷி உணவு கொண்டு வந்த பொழுது, கொடுத்துச் சென்ற பூக்களையெல்லாம் சூடிக் கொண்டு, கடலிலேயே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் முதியவர் காட்சியளித்தார். மகரிஷிக்கு சயன கோலத்தில் காட்சி அளித்ததால் இத்தல பெருமாள் ‘தலசயனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார் என புராணங்கள் கூறுகின்றன.


புதிய கோவில்


இந்தநிலையில், 14ஆம் நூற்றாண்டில் மாமல்லபுரம் நகர் பகுதியில் விஜயநகர ஆட்சிக் காலத்தில்,  ஆகம விதிப்படி இப்பொழுது இருக்கும் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருமால் தனது வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேஷன் மீது சயன நிலையில் காட்சி தருகிறார். திருமாலின் இருபுறங்களும்  திருமங்கை தாயாரும், ஆண்டாளும் தனி சன்னதியில் அருளால் இருக்கின்றனர்.


 பலன்கள் என்ன ?


 இக்கோவில் இருக்கும் பெருமாளை தரிசித்தால் வைகுண்ட நாதரை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது   ஐதீகமாக உள்ளது.


தலைவிருட்சம்


 இக்கோவிலின் தலைவருட்சகமாக பனைமரம் உள்ளது