Maha Shivratri 2024: தமிழ் மாதங்களில் வரும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அதில் மாசி மாதம் மற்ற மாதங்களை காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த மாசி மாதத்திலே மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.


மகா சிவராத்திரி:


மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்ப்பிறையே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இப்போது முதலே சிவாலயங்களிலும் சிவ பக்தர்களும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


நடப்பாண்டு வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மகா சிவராத்திரியானது 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ மகா சிவராத்திரி ஆகும். இந்த நன்னாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வணங்கி பூஜித்தால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.


300 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்:


இந்த மகா சிவராத்திரியில் நான்கு யோகங்கள் ஒன்று கூட உள்ளது. அதாவது, சர்வார்த்த சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் மற்றும் சுக்கிர பிரதோஷம் இந்த மகா சிவராத்திரியில் ஒன்று கூட உள்ளது. இதற்கு முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மகா சிவராத்திரியில் இந்த நான்கு யோகங்களும் ஒன்று கூடியதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு பின்பு, தற்போதுதான் இவை ஒன்று கூட உள்ளது.


சர்வார்த்த சித்தி யோகம்:


யோகம் என்றாலே அதிர்ஷ்டம் என்ற பொருள் அடங்கும். சர்வார்த்த சித்தி யோகம் என்பது ஒருவருடையே அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கக்கூடியது ஆகும்.  மகா சிவராத்திரி தினத்தில் இந்த சர்வார்த்த சித்த யோகமானது காலை 6.38 மணி முதல் 10.41 மணி வரை உள்ளது.


சிவ யோகம்:


சிவ யோகம் என்பது ஆழ்மன அமைதியுடன் செய்யப்படும் தியானம் மற்றும் சிவ நாமங்கள் ஆகியவற்றை கைகூட வைக்கும் யோகமே ஆகும்.


ஷிரவண நட்சத்திரம்:


சனி பகவானுக்கு உரிய நட்சத்திரமே ஷிரவண நட்சத்திரம் ஆகும். இந்த ஷிரவண நட்சத்திரத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அது சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. ஷிரவண நட்சத்திரம் வரும் இந்த மகா சிவராத்திரியில் சனி பகவானையும், அவரது குருவான சிவனையும் வணங்கி புதிய தொழில் தொடங்குவது அமோகமாக கருதப்படுகிறது.


சுக்கிர பிரதோஷம்:


சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் பிரதோஷம் ஆகும். வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்கிர பிரதோஷம் ஆகும். மகா சிவராத்திரியில் வரும் இந்த சுக்கிர பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளில் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.


மகா சிவராத்திரி தினத்தில் ஒன்று கூடும் இந்த சர்வார்த்த சித்த யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் மற்றும் சுக்கிர பிரதோஷத்தால் இந்த மகா சிவராத்திரி மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த தினத்தில் சிவாலயத்திற்கு சென்று அவரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள், கடன் தொல்லைகள் நீங்கி பல இன்னல்கள் நீங்கி திருமண யோகம், புத்திர பாக்கியம் உள்பட செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம் ஆகும்.


ALSO READ | Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்