வாழ்க்கையில் நினைத்தவை யாவும் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் கடவுளை வேண்டுவோம்; விரதங்கள் இருப்போம் இல்லை. அப்படியேயில்லை என்றாலும், நாம் நலமுடன் மகிழ்வோடு வாழ் வேண்டும் என்ற வேண்டுதல் எப்போதும் நம்மிடம் இருக்கும். 


மகாசிவராத்திரி:


வரும் பிப்ரவரி -18 சனிக்கிழமை அன்று மகா சிவராத்திரி நாள். இந்த நாளில் ஈசனை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு காலமாகப் பிரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது மிகவும் நல்லது. 


மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்தால் எல்ல நன்மைகளும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அதையே நாம் காலங்காலமாக பின்பற்றி வருகிறோம். 


மகாசிவராத்திரி மகிமைகள்:


சிவனின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலும், பிரம்மனும் தங்களின் முயற்சிகளில் தோல்வி அடைந்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்க சிவபெருமான் லிங்கோத்பவராகவும், பெரும் ஒளிப்பிழம்பாகவும் தோன்றியது,  கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றது,  மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்தது, - இப்படி நடந்ததெல்லம் இந்த மகாசிவராத்திரி நாளில்தான். 


 இந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும், விரத முறைகள் உள்ளிட்டவற்றை பற்றி கீழே காணலாம்.


மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் முந்தைய நாள் மட்டுமே உணவருந்திவிட்டு சிவநாமம் ஜபித்து தயாராக இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சிவபெருமானை தவிர யாரையும் நினைக்கக் கூடாது. சிவ புராண நூல்களை வாசிக்கலாம். சிவன் பாடல்களைப் பாடலாம். கோயிலுக்குச் சென்று பூஜைகளில் பங்கேற்கலாம். 


மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை பூஜிப்பது ஓராண்டு முழுவதும் ஈசனை நினைத்து பூஜை செய்த புண்ணியம் கிட்டும் என்று சொல்லப்பட்டுகிறது. ஐந்தெழுத்தான சிவநாமமான ‘ ஓம் நம சிவாய’-த்தினை மகா சிவராத்தி நாள் முழுக்க சொன்னால் நல்லது. ஆண்டுமுழுக்க சிவபூஜை செய்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. 


மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? 


விரத முறைகளை நெறியோடு பின்பற்ற வேண்டும். மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிக்க வேண்டும். 


 சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவன் சாலிஸம் படிக்க வேண்டும். அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு இருக்கக் கூடாது. 


சிவராத்திரி என்பது சிவனின் ராத்திரி. அன்றைய நாள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் ஓம் நமசிவாய என ஜெபித்து சிவனை பூஜிப்பபவர்கள் மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர் என்று சொல்லப்படுகிறது. 


வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஒரு சில சிவாலங்களில் சிவராத்தியன்று இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அதில் பங்கேற்று சிவனை தியானிக்கலாம். வீடுகளில் பூஜை செய்பவர்கள் வீடுகளிலேயே தேவாரம் திருவாச பாடல்களை படிக்கலாம்.