மகா சிவராத்திரி உருவானதற்கு புராணங்களில்  பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. புராணங்களின்படி, இந்தப் பிரபஞ்சம் செயல்படுவதற்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் காரணமாக இருப்பதாக ஆன்மீக கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு ஆன்மீக கலாச்சாரங்கள் இருக்கின்றன. 


ஆன்மீக ரீதியிலாக அதிகமாக பேசப்படும் சிவனைப் பற்றி பல கதைகள் உண்டு. சிவன் கடவுளா? கற்பனையா? - இப்படி பல கருத்துகள் இருந்து வந்தாலும், ஈசன் என்பது இப்படிதான் உருவானான் என்று புராணங்களின் வழியே பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஆதியும் அந்தமுமாக இருப்பவர் சிவன் என்று நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளாக இருப்பவர்களில் முதன்மையானவர் சிவன் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது. அதாவது, தோற்றத்திற்கு காரணமாக இருப்பவர் பிரம்மா, உலகை காக்கும் பணி செய்பவர் திருமால், ஈசன் அழிக்கும் தொழிலை செய்வதாகவும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவன் எப்படி உருவானார்? பிறந்தாரா? எப்போது, எங்கு பிறந்தார் என்பது என்ற கேள்விகள் எழுந்தால் அதற்கும் புராண இலக்கியங்களில் பதில் இருக்கிறது. 


சிவன் - பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக இருப்பவர் என்று நம்பப்படுகிறது. ஈசன் சுயம்புவாக தோன்றினார் என்று சொல்லப்படுகிறது. சுயம்புலிங்கம். 


சிவபெருமான் கைலாயத்தில் பரவசமாக ஆடிக் கொண்டிருந்ததாகவும், அவர் தியானம் செய்து கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வுலகில் சகலமும் சிவன் சித்தம் என்று சொல்லப்படுகிறது. தேவாரன், திருத்தொண்டர் புராணம் உள்ளிட்ட புராண இலக்கியங்கள் சிவன் பற்றிய திருவிளையாடல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பார்வதி சிவனையே மணக்க வேண்டும் என்று விரதம் இருந்ததாகவும், அதற்கு சிவன் என்ன பதிலுரைத்தார் என்பது புராணங்களில் கூறப்பட்டுள்ளது.  


ஆக, புராணங்களின் கூற்றுப்படி, எதுவும் இல்லாமல் இருப்பவனே ஈசன். அதாவது, சிவனுக்கு பெற்றோர், சொந்தங்கள் என்று யாரும் இல்லை. அவர் சுயமாக, ஜோதி வடிவாக, லிங்கமாக தோன்றியவர். 


இது தொடர்பான விரிவான விவரங்களை சிவ புராணங்களில் எழுதப்பட்டுள்ள கதைகள் மூலம் அறியலாம். திருமுறைகள் பல்வேறு காலகட்டங்களில் சிவனடியார்களால் எழுதப்பட்டது.


மகா சிவராத்திரி 2023


உலகம் நிலைப்பெற ஆதி காரணமாக இருக்கக் கூடிய சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவராத்திரி விரதம்...எட்டுணையும் உளத்து அன்பிலேரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூஜை பண்ணினர் நற்கதி அடைவைர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் என்ற நூல் தெரிவிக்கிறது. 


பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரி விரதத்தை தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19ஆம் தேதி முடிக்க வேண்டும். அல்லது, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 6.59 மணிக்கு தொடங்கி மதியம் 3.24 மணிக்குள் எந்த நேரத்திலும் விரதத்தை முடிக்கலாம். விரத நாளில் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். மேலும், கண் விழித்து மந்திரங்கள் சொல்ல வேண்டும். அதன்படி,


மந்திரங்கள்


ஓம் நம சிவாய


ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் நம் மனதிலிருந்து பயம் நீங்கும். நமக்குள் ஒரு நேர்மறைவான அதிர்வை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சிவராத்திரியன்று விரதம் இருந்தால் சகல நன்மைகளும் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.




மேலும் வாசிக்க.. 


Isha Mahashivratri 2023 : ஈஷாவில் மகா சிவராத்திரி: எங்கு காணலாம்? பங்கேற்பது எப்படி? முழு விவரம்!