ஐஸ்கட்டியினால் பனி லிங்கம்


கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சிவாலயங்களில் நாளை மகா சிவ உங்கள் ராத்திரி ஓட்டி சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பிரம்ம குமாரிகள் விஷ்வ வித்யாலயம் சார்பில் அமர்நாத் பனி குகை போல் அரங்கம் அமைக்கப்பட்டு ஐஸ்கட்டியினால் பனி லிங்கம் தத்ரூபமாக அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளனர்.



 

நாளை ஒரு நாள் மட்டும் மகா சிவராத்திரி முன்னிட்டு மாலை 4 மணி முதல் இரவு முழுவதும் இந்த தரிசனத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் ராஜ தியான யோகம் குறித்து தகவல்களை அதன் நிர்வாகிகள் எடுத்துரைப்பதும் அதனை பொறுமையுடன் பக்தர்கள் கேட்டு வருகின்றனர். இதேபோல் மகா சிவராத்திரி குறித்த பல்வேறு தகவல்களும் புகைப்பட கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கானா திரளான பக்தர்கள் பனியன் இனத்தை காண தரிசித்து வருகின்றனர்.

சிவராத்திரி:


சிவராத்திரி பண்டிகையை ஒட்டி சிவாலயங்களில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.  இன்று சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் இரவுகளில் சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பார்கள்.











சிறப்பு பூஜைகள்:


ஒவ்வொரு சிவாலயங்களில் வேறு, வேறு நேரங்களிலும் இந்த ஜாம பூஜைகள் நடத்தப்படும். தைப்பூசத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாடும் பெரிய பண்டிகையாக சிவராத்திரி உள்ளது. ஆலயங்களுக்கு இன்று இரவு முதல் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


சிவாலயங்கள்:


சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம், திருவொற்றியூரில் உள்ள தியாகராஜர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் இதர புகழ்பெற்ற கடலூர் திருவதிகை வீரட்டானேசுவரர் சிவன் ஆலயம், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதசுவாமி ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம், புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்படும். பக்தர்கள் மேற்கண்ட ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.




மேலும், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை வணங்குவதற்கும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று சிவராத்திரி மட்டுமின்றி சனிப்பிரதோஷம் என்பதால் கூடுதல் சிறப்புடைய நாளாக பக்தர்கள் கருதுகின்றனர்.