"திருப்பரங்குன்றத்தில் நாளை அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளித் திருநாளைப் போல விமரிசையாகக் கொண்டாடுவோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

நாளை தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் நூறாண்டுகளுக்கு மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மற்றொரு தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிரச்னை நீண்ட காலகாலமாக நீடித்து வருகிறது. இந்த விவகாரம் பெரிதும் தெரியாத நிலையில், கடந்த ஒரு சில வருடமாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த கார்த்திகை தீபத்தன்று மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தாமல் இருந்ததால், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அதன் தீர்ப்பையும் தமிழக அரசு மீறியது. தற்போது நாளை தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.

Continues below advertisement

இனிப்புகள் வழங்கி வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்று பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பாகத் திரண்டு, உற்சாகமாகக் கோஷங்களை எழுப்பித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பாஜக சார்பில் கோவில் முன்பாக 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது.
 
இப்போது இனிப்புகள் வழங்கி கொண்டாடவில்லை.
 
திருப்பரங்குன்றம் பகுதி உள்ளூர் மக்கள் கூறுகையில், "இந்தத் தீர்ப்பை முன்னிட்டு நாங்கள் இப்போது இனிப்புகள் வழங்கி கொண்டாடவில்லை. மாறாக, நாளை மாலை மலை உச்சியில் வெற்றிகரமாகத் தீபம் ஏற்றப்பட்ட பிறகு, ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளித் திருநாளைப் போல விமரிசையாகக் கொண்டாடுவோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
 

திருப்பரங்குன்றம் விரையும் CRPF படை?

திருப்பரங்குன்றம் தூணியில் தீபம் ஏற்றும் பணிக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூரில் இருந்து சி.ஆர்.பி.எப்., படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து 200 பேர் கொண்ட படை திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தை CRPF கண்ட்ரோலில் எடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது.