இஸ்லாமியர்களின் புனித இரவான லைலத்துல் கத்ரு  இரவையொட்டி இரவு முழுவதும் விடிய விடிய சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். இறைவனுக்காக நோன்பு நோற்கின்றனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் பகல் நேரங்களில் உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் இறைவனுக்காக நோன்பு நோற்கின்றனர். இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் உணவு  உட்கொண்டு மாலை வரை ரமலான் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில் ரமலான் மாதத்தின் 27நாள் இரவினை இஸ்லாமியர்களின் புனிதமிக்க  குர்ஆன் அருளப்பட்ட இரவாக கருதி விடிய விடிய இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு மதுரை மாவட்டத்தில் மகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கலைநகர், ஆனையூர், வள்ளுவர் காலனி, கோரிப்பாளையம், சிலைமான், திருமங்கலம், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், உள்ளிட்ட மாவட்ட முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இரவு முழுவதும் தங்கிய இஸ்லாமியர்கள் அதிகாலை வரை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பின்னர் அடுத்தநாளுக்கான நோன்பினை கடைபிடித்தனர். இந்நிலையில் லைலத்துல் கத்ரு இரவை முன்னிட்டு மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பை வைப்பதற்காக அதிகாலை 3மணிக்கு சஹர் உணவு பரிமாறப்பட்டது

Continues below advertisement