மார்கழி மாதம் பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித்தேரில், எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

 

கோவில் நகர் என்று அழைக்கப்படும் காஞ்சி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் முருகன் கோவில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடைபெறும் . அந்த வகையில் மார்கழி மாதம் பௌர்ணமி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையானது நடைபெற்றது. 



இதன் பின்பாக பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளித் தேரில் அலங்கரிக்கப்பட்டு,  வள்ளி தெய்வானை உடன் பல்வேறு வண்ண பட்டுடுத்தி வைரும் வைடூரியும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளித்திரை பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரில் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



 





தும்பவனத்தம்மன் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமிய ஒட்டி ஊஞ்சல் சேவையில் அம்பாள் அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன் 

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான தும்பவனத்தம்மன் ஆலயம் உள்ளது. இந்த தும்பவனத்தம்மன் ஆலயம் பல்வேறு  பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. தும்பவனத்தம்மனுக்கு பௌர்ணமியை ஒட்டி சிறப்பு கலச பூஜை நடைபெற்றது.



 

பின்பு   தும்பவனத்தம்மனுக்கு பால்,தேன்,இளநீர், சந்தனம், தயிர், பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  தும்பவனத்தம்மன் வெள்ளி உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் மார்கழி மாத பௌர்ணமியை ஒட்டி  அம்பாள் வாகனத்தில் தும்பவனத்தம்மன் ஊஞ்சலில் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் காட்சி அளித்த தும்பவனத்தம்மனை தரிசனம் செய்து சென்றனர்.