தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி முதல் நாள் துர்க்கை அம்மன் சிறப்பு அபிஷேகம்.
இன்று நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி முதல் நாள் அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்வாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு துர்க்கை அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி துர்க்கை அம்மன் முதல் நாள் அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் எல் ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு என்னைக்காப்பு சாட்சி பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் நெய் இளநீர் எலுமிச்சை சாறு திருமஞ்சல் மஞ்சள் சந்தனம் அபிஷேக பொடி அரிசி மாவு விபூதி குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக துர்க்கை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சாமிக்கு மகா தீபாவளி நடைபெற்றது கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி முதல் நாள் துர்க்கை அம்மன் அபிஷேக நிகழ்ச்சியை காண ஆன்மீக பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.