தாளியாம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கரகம் ஏந்தி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி திருவிழா கடந்த ஏப்ரல் 9 ம் தேதி கரகம் பாலித்தலுடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடி கரகம் ஏந்தி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் தீ குண்டத்தில் பக்தர்கள் கரகத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தாளியாம்பட்டியைச் கிராமத்தைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் தீமிதி திருவிழாவினை கண்டுகளித்தனர்.
குளித்தலை அருகே சின்ன பனையூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சின்ன பனையூரில் ஸ்ரீ மாரியம்மன், விநாயகர், கருப்பசாமி, பெத்தாச்சி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைய டுத்து இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, நாடி சந்தனம் லட்ச்சார்ஜனை, மகா தீபாராதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
இன்று காலை 4 ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக கொண்டுவந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டத்தை அடுத்து சிவாச்சாரியர்கள் கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் சின்னப்பனையூர் நெய்தலூர் தெற்கு ககிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
குளித்தலை அருகே மலையாண்டிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மலையாண்டிபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடத்தப்பட்டன
தாசி பொம்ம நாயக்கர் மந்தையில் 14 மந்தைகளை சேர்ந்த திருவிழாவில் கலந்து கொள்ள வந்த மந்தையர்களுக்கு வரவேற்பும், மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, மாலை தாண்டும் விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களிலும் இருந்து 10 மந்தைக்காரர்கள் கலந்து கொண்டனர், மந்தைக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாலை தாண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வளர்க்கப்படும் 400 மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டன, கலந்து கொண்ட காளைகளில் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் முதல் பரிசு மஞ்சள் தூள் எலுமிச்சை கனி பரிசுகளும் வழங்கப்பட்டது, நாயக்கர் சமூகத்தின் பாரம்பரிய கலை விளையாட்டான தேவராட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டு களித்து மகிழ்ந்தனர்.