தென்திருப்பதி அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய புரட்டாசி மாத தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


 






தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகன திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் புரட்டாசி மாத முக்கிய நிகழ்வான புரட்டாசி மாத தேரோட்டம் இன்று நடைபெற்றது.


 


 


 




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை தேருக்கு வந்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய கல்யாண வெங்கட்ரமண சுவாமி தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் திருத்தேரை  வடம்பிடித்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் இழுத்தனர்.


 




 


தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய திருத்தேர் ஆலய நான்கு மட வாசல் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் தேர் நிலைக்கு வந்தடைந்தது. புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டும் ,புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமை முன்னிட்டும் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் ஆலய வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 




 


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ராமன் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் வருகை ஒட்டி கரூர் மற்றும் தாந்தோன்றி மலை காவலத்துக்குட்பட்ட 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.


 


 





தேர் கிரிவலப் பாதையை சுற்றி வருவதால் காலை 8:00 மணி முதல் 10 மணி வரை இப்பகுதியில் மின் தடை இருக்கும் என மின்வாரிய அதிகாரிகளும் தகவல் தெரிவித்தனர். புரட்டாசி மாத திருத்தேரை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானத்தை பக்தர்களுக்காக சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.