கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது


 




 


கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 


கும்பாபிஷேக விழாவை ஒட்டி சிவாச்சாரியார்கள் யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகங்கள் நடத்தி பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார் புண்ணிய தீர்த்தத்திற்கு பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு கலசங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வலம் வந்தார். பின்னர் கோபுர கலசத்தை சென்றடைந்ததும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


 




கோபுர கலசத்திற்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் பொட்டிட்டு தீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. 


தொடர்ந்து மூலவர் புது வாங்கலம்மனுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது


 




 


கும்பாபிஷே விழாவில் சுமார் 40,000 பொதுமக்கள் வருகை இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


புது வாங்கள் அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இந்தியாவில் பிரசித்தி பெற்ற 37 புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி, கேரள கபினி, சிறுவாணி ஆறு, சிறுகேசரி, தாமிரபரணி, மதுரை, வைகை ராமேஸ்வரம் 21 தீர்த்தம், பாலாறு சிறுநெறி ரங்கமலை, சேலம் கஞ்சமலை, கங்கை உற்பத்தியாகும் இடம். பஞ்சலீகம் அருவி, கொண்டேஸ்வரர் தீர்த்தம், அமராவதி நதி, ஆகிய புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் குடிப்பாட்டு மக்கள் தீர்த்தமாக வாங்கலம்மன் கோயிலுக்கு நீரை தலையில் வைத்து சிறப்பு பூஜை செய்து ராஜகோபுர கலசங்களுக்கும், வாங்கலம்மன், கற்பக கிரகம் மண்டபத்தில், இருக்கும் மற்றும் காவல் தெய்வங்களுக்கும் புனித நீர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வவிநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோவில் வளர்பிறை சதுர்த்தியை ஒட்டி விநாயகருக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் விபூதி உள்பட பதினாறு வகையான வாசனை திரவியங்கள் உடன் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதே போல் காகிதபுரம், புகலிமலை, அடிவாரம் ஓம்சக்தி நகர், இஐடி பாரி, பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.