கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஆண் பக்தர்களின் வீட்டுப் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில், ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை நடத்தும் 4-ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சபரிமலை செல்லக்கூடிய ஆண் பக்தர்களின், வீட்டு பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருவிளக்கு பூஜை செய்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது.
கோவிலில் நவம்பர் 26ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவக்கியது. இன்று நெய் விளக்கு ஏந்துதல் நிகழ்ச்சியும், மதியம் அன்னதான நிகழ்ச்சியும், மாலை கோவில் வளாகத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் தங்களது குடும்பம் செழித்தோங்கவும், மழை பொழிந்து பூமி வளம் பெறவும், விளைச்சல் பெருகவும், நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ஏற்றம் பெறவும், குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக வாழவும், தங்கள் வீட்டு ஆண்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து நலமுடன் வீடு திரும்பி விரதத்தை முடிக்க வேண்டிக்கொண்டு பூஜையில் செய்தனர்.
பூஜையின் போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி திருவிளக்கு பூஜையை வெகு சிறப்பாக நடத்தினர். ஏராளமான ஊர் பொதுமக்களும் திருவிளக்கு பூஜையை கண்டு ரசித்தனர்.