கரூர் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம்.


 


 




புரட்டாசி மாதம் என்றாலே பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஏராளமான பக்தர்கள் ஆலயம் வரத் தொடங்கினர்.


 




 


அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற பிறகு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு கடந்த வாரத்தை விட இந்த வாரம் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.


 


 




அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடும் சிறப்பாக ஆலய நிர்வாகிகள் சார்பாக செய்துள்ளனர் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்திற்கு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


 




சுவாமி தரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் ஆலய கருவறை அருகே சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தம், துளசி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கி வருகின்றனர். அதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தின் சார்பாக அனைத்து பக்தர்களுக்கும் மினி லட்டு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


 




மேலும் பக்தர்கள் வருகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிசி டிவி பொருத்தப்பட்டு பாதுகாப்புக்கு மாவட்ட காவல்துறை உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.