அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பானை கொளுத்தப்பட்டது.




தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கார்த்திகை தீபம் பௌர்ணமியை முன்னிட்டு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.




இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஆலய மண்டபத்தில் கல்யாணம் வெங்கட்ரமண சுவாமி பிரதேக அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் மகா தீபாராதனை காட்டிய பிறகு, மேல தாளங்கள் முழங்க ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் வாசல் அருகே உள்ள சொக்கப்பானை கொளுத்தும் இடத்திற்கு வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு, ஆலய வாசலில் இருந்த சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 






அதைத் தொடர்ந்து ஆலய கோபுரத்தில் உள்ள அகல் விளக்கு மூலம் தீப்பந்தம் ஏற்றப்பட்டது. பின்னர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி உற்சவர் மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்டு திருவிரு உலா காட்சி அளித்தார்.




தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி விராலிப்பட்டி சந்தன கருப்புசாமி மற்றும் கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா.


கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே விராலிப்பட்டி வடசேரி நாடு கங்கை நம்பி பங்காளிகள் குலதெய்வமான சந்தன கருப்பசாமி, கன்னிமார், மதுரை வீரன், பட்டவன் ஆகிய கோயல்கள் தனித்தனியாக உள்ளது. இந்த கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து சந்தன கருப்பசாமி, கன்னிமார், மதுரை வீரன், பட்டவன் ஆகிய கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய காவிரி நதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கையுடன் பால்குடம் தீர்த்த குடங்கள் எழுத்துவரப்பட்டு கோயிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.


முதல் கால பூஜையில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி கும்பல அலங்காரம் யாகசாலை பிரவேச மண்டப அர்ச்சனை உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெறும் இரண்டாம் கால பூஜையில் மங்கல இசை விக்னேஸ்வர பூஜை வன்மையாக வசனம், நாடி சந்தானம் உயிர்களை ஏற்றுதல், கோ பூஜை படம் புறப்பாடுகள் நடைபெற்றது.


தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கோயில் நிர்வாகி அழகர் மணியக்காரர் சுப்பிரமணியன் மற்றும் கங்கை நம்பி பங்காளிகளின் விழா கமிட்டியாளர்கள் முக்கியஸ்தர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர் அமைப்பினர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.