தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி மாத பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலாவில் காட்சி அளிக்கிறார். இந்நிலையில் சுவாமி பின்னக்கிளை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு, மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.
அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத பெரும் திருவிழாவில் பின்னக்கிளை திரு வீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள், வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. மாதந்தோறும் பிரதோஷ விழா நடைபெற்று வரும் நிலையில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, ஆலயத்தில் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வெள்ளி கவச உடைகள் சாத்தப்பட்ட பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகாதேவாதனை நடைபெற்றது.
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டு மருதூர் ஆரா அமுதீஸ்வரர், மருதூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சின்ன ரெட்டியப்பட்டி ஆவுடையலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சி லேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.