பள்ளப்பட்டியில் நடைபெறும் உருஸ் விழாவை முன்னிட்டு வெயிலில் தாகத்தை தணிக்க பள்ளப்பட்டி மேற்கு தெரு நண்பர்கள் சார்பில் 5,000 நபர்களுக்கு லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது.


 




 


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் புகழ்பெற்ற 264 ஆம் ஆண்டு சந்தனக்கூடு  உருஸ் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கரூரில் கடந்த 20 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் வெளியில் பொதுமக்கள் செல்லமுடியாத அளவிற்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 


 




 


பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் ஷேக் அப்துல் காதர் தர்ஹா 264 சந்தனக்கூடு உருஸ் விழா இரண்டாம் நாளை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் வருகை தந்தனர். அவர்கள் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக பள்ளப்பட்டி மேற்கு நண்பர்கள் சார்பில் 5,000 பேருக்கு லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. உருஸ் விழா நிறைவு நாள் என்பதால் ஏராளமான இஸ்லாமியர்கள் வருகை தர உள்ளனர் அவர்களுக்கும் லெமன் ஜூஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.