கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகனுக்கு மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் விபூதி அலங்காரம் செய்யப்பட்டது
மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் ஸ்ரீ முருகனுக்கு மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக அழகன் முருகனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் நிரூபித்த பிறகு விபூதி அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் கட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் முருகனுக்கு மார்கழி மாத சஷ்டி விபூதி அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை ஆலய சிவாச்சாரியார் கார்த்திக் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து ஆறாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா.
வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு பல்வேறு வைணவ ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆறாம் நாள் நிகழ்ச்சியாக இன்று பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ரெங்கநாதருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று ஆலய மண்டபத்தில் சுவாமியை பல்லாக்கில் கொழுவிற்க செய்தனர்.
அதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து சுவாமி உள்பிரகாரம் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபம் வந்தடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஆண்டாள் சன்னதி அருகே மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு ஆலயத்தில் பட்டாச்சாரியார்கள் துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கூறியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் துளசி, மஞ்சள,தீர்த்தம் வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற ஆறாம் நாள் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.