கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Continues below advertisement


 




 


கரூர் நகரப் பகுதியான எல் ஜி பி நகர் பகுதியில் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, வெண்ணெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


ஆஞ்சநேயர் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, துளசி மாலை அணிவித்து 108 வடை சாத்தப்பட்டு, வெண்ணையால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆஞ்சநேயருக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 




 


கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகத்திற்கான ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.