கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுவாமி  வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.


 




 


தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 




 


இந்நிலையில் நாள்தோறும் கல்யாணம் வெங்கட்ரமண சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்நிலையில் சுவாமி திருவீதி உலாவில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி திருவீதி விழா காட்சி அளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பல்வேறு ஆபரணங்கள் அணிவித்த பிறகு சுவாமியை வெள்ளி கருட வாகனத்தில் கொழுவிருக்க செய்தனர்.


 




 


அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி திருவீதி உலா ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். புரட்டாசி மாத வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.