கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கரூரில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து காலபைரவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வட மாலை சாத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை காண ஏராளமான திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.