கரூர் தான்தோன்றி மலை கணபதி பாளையம் அருள்மிகு பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை கணபதி பாளையத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் ஆன்மிக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பால முருகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக அன்று கணபதி ஹோமத்துடன் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், அதன் தொடர்ச்சியாக முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. மேலும் ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் கூறியபடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் புனித தீர்த்த கலசத்தை தலையில் சுமந்த வாறு கோபுர கலசம் வந்தடைந்தனர். அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் என சுவாமி களுக்கு உரிய நேரத்தில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூலவர் பகவதி அம்மன், விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித தீர்த்ததால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பின்னர் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, மகா தீபாரதனை கட்டப்பட்டது. கரூர், தான்தோன்றி மலை, கணபதி பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவின் நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் மகா கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர். பின்னர் அனைவருக்கும் யாக சாலையில் உள்ள கயிறு மற்றும் விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.கரூர் தான்தோன்றி மலை, கணபதி பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். மேலும் நாளை முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல் அபிஷேகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial