தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளை முன்னிட்டு அருள்மிகு மாரியம்மன் மற்றும் மாவடி சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா  காட்சியளித்தார்.


சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது .


இந்நிலையில் கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இரவு உற்சவர் மாரியம்மன் திருவிழா காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மன், உற்சவர் மாவடி ராமசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு பொருட்களை அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அறிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பிறகு மயில் வாகனத்தில் கொழுவிற்க செய்தனர்.


 




 


தொடர்ந்து ஆலயத்தில் பூசாரி சாமிக்கு மகா தீ தீபாராதனை காட்டினார். பிறகு ஆலயத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா தேர் வீதி, பூ மார்க்கெட், அஞ்சு ரோடு, வ உ சி தெரு, பஜார், மேட்டு தெரு உள்ளிட்ட பகுதியில் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆலயம் வந்து அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாவடி ராமசுவாமி ஸ்வாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது.


 




 


கரூர் தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தரை 1 தமிழ் புத்தாண்டு மயில்வாகன திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியினும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


குளித்தலை அருகே சிந்தலவாடி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2000 கிலோ காய்கறி, பழங்களால் சுவாமி சிறப்பு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.


சித்திரை 1ம் தேதி ஸ்ரீ சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி  பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஆலயமான ஸ்ரீ மகாமரியம்மன் ஆலயத்தில் சிவாச்சாரியர்கள் கணபதி யாகம் நடத்தினர். மாலை நேரத்தில் 2000  கிலோ அளவு காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


கேரட், பீட்ரூட், உருளை, பச்சை மிளகாய், வாழைக்காய், நெல்லிக்காய், வெண்டைக்காய், செவ்வாழை, மாங்காய், தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட 20க்கும் மேலான பல்வேறு வகையான காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதணை நடைபெற்றது.


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற காய்கறி, பழ வகை அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.