கார்த்திகை ஒன்றை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை ஒன்றை முன்னிட்டு பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கி இருக்கிறது. குறிப்பாக 48 நாள் மண்டல கடைபிடிக்கும் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் கன்னி சாமிகள் மாலை அணிவித்து விரதம் இருந்து கேரளாவில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வருவது வாடிக்கை. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஐயப்ப நாணயங்களில் மாலை அணிவிக்கும் முயற்சி சிறப்பாக நடைபெற்றது.
அதிலும் குறிப்பாக கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஐயப்பன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கன்னிசாமி முதல் ஆண்டுதோறும் மாலை அணிவிக்கும் குருசாமி வரை அனைவரும் மாலை அணிவித்து ஐயப்ப சுவாமியை மனம் உருகி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு தொடர்ச்சியாக அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.