தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் மாசி மாத திருத்தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.


 




இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி இன்று சிம்ம வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார். ஆலய மண்டபத்திலிருந்து மேல தாளங்கள் முழங்கு புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமண சுவாமி முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.


தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசி மாத உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


வெங்கமேடு நடு குளத்துப்பாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மாசி மாத மாவிளக்கு பூஜை.


 


 




கரூர் மாவட்டம் இனாம் கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள நடுகுளத்துப்பாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமி கரகம் வந்தது. அதை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒரு நிலையில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ பகவதி அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது இந்த மாவிளக்கு பூஜையை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கற்பக விநாயகர் மற்றும் பகவதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு இரவு மேல தாளங்கள் முழங்க மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த மாவிளக்கு பூஜையை முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள் தங்கள் வீட்டில் மா விளக்கு போட்டு ஆலயத்தில் வந்து படையலிட்டனர்.


 




 


 


அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நடுகுளத்துப்பாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய மாசி மாத மாவிளக்கு பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.