கரூர் அரவக்குறிச்சி தும்பிவாடி கிராமம் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


 




கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், தும்பிவாடி கிராமம், வெள்ளரிப்பட்டி, டி. பசுபதிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மஹா பெரிய காண்டி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மூலவர் பெரியகாண்டி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.


 


 




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பரிவார தெய்வங்களான விநாயகர், பாலமுருகன்,சப்த கன்னிமார், பொன்னர், சங்கர், தங்காயி, மகாமுனி, கருப்பண சுவாமி, நாக தேவதை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




 


அதன் தொடர்ச்சியாக மூலவர் மகா பெரிய காண்டி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாட்சி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,அபிஷேக பொடி, அரிசி மாவு, சீவக்காய், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




பின்னர் மூலவர் மகா பெரிய காண்டி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டினார். தொடர்ச்சியாக மூலவர் மகா பெரிய காண்டி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.


 


 




கரூர் அரவக்குறிச்சி தும்பிவாடி கிராமம் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கொங்கு நாடு கோவம்ச ஆண்டி பண்டாரத்தார் பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.