தெற்கு காந்திகிராமம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு உற்சவர் சுவாமி திருவீதி உலா.
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் தொடங்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக வருடம் தோதும் கார்த்திகை மாதம் சுவாமி உற்சவர் திருவீதி உலா மற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு உற்சவர் திருவீதி உலா பத்தாம் ஆண்டாக ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்கு சிறப்பு ரத வாகனத்தில் ஐயப்ப சுவாமி கொழுவிக்க இருக்க செய்தனர். அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு, பெண் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தியவாறு ஆட்டம், பாட்டத்துடன் சுவாமி திருவீதி விழா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
இந்தத் திருவீதி உலா நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு இரவு புறப்பட்ட திருவீதி உலா அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் வானை வேடிக்கை வைத்து சுவாமியை வரவேற்றனர்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சஷ்டி பூஜை முருக பெருமானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் ஸ்ரீ பாலமுருகனுக்கு கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேர்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து அழகன் முருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அறிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சஷ்டி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.