தமிழ் மாதங்களில் மிக மிக முக்கியமான மாதம் கார்த்திகை மாதம் ஆகும். சிவபெருமான், முருகன், ஐயப்பன் என பல தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக திகழும் கார்த்திகே நேற்று பிறந்தது. கார்த்திகை மாதத்தில் முருகனுக்கும், ஐயப்பனுக்கும் பலரும் மாலை அணிவது வழக்கம் ஆகும்.


முக்தி தரும் மாதமாக கருதப்படும் கார்த்திகை மாதத்தில் எந்தெந்த கிழமையில் என்னென்ன விசேஷம் வருகிறது? என்பதை கீழே காணலாம். கார்த்திகை மாதத்தில் மிக மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுவது கார்த்திகை தீபம் ஆகும்.


தீபம் எப்போது?


கார்த்திகை தீப நிகழ்வில் முதலில் பரணி தீபம் ஆகும். மிக மிக முக்கியமான நிகழ்வாக கார்த்திகை தீபம் ஆகும். ஸ்ரீபாஞ்சராத்திர தீபம் ஆகும். பரணி தீபம் வரும் டிசம்பர் 12ம் தேதி ஆகும். பரணி தீபமானது வியாழக்கிழமை வருகிறது. மிக மிக முக்கியமான நிகழ்வான கார்த்திகை தீபம் டிசம்பர் 13ம் தேதி வருகிறது. கார்த்திகை தீபமானது வெள்ளிக்கிழமை வருகிறது. ஸ்ரீபாஞ்சராத்திர தீபமானது வரும் டிசம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.


என்னென்ன விசேஷங்கள்? எப்போது?


சங்கடஹர சதுர்த்தி – நவ. 19 - செவ்வாய்


சஷ்டி – நவ. 21ம் தேதி – வியாழன்


ஏகாதசி – நவ. 26ம் தேதி – செவ்வாய்


பிரதோஷம் – நவ. 28ம் தேதி - வியாழன்


சிவராத்திரி – நவ. 29ம் தேதி - வெள்ளி


அமாவாசை – நவ. 30ம் தேதி – சனிக்கிழமை


சதுர்த்தி – டிச. 5ம் தேதி – வியாழன்


திருவோணம் – டிச.5ம் தேதி – வியாழன்


ஏகாதசி – டிச.11ம் தேதி - புதன்


பிரதோஷம் – டிச.13ம் தேதி - வெள்ளி


பௌர்ணமி – டிச. 15ம் தேதி – ஞாயிறு


முகூர்த்த நாட்கள் எப்போது?


கார்த்திகை மாதத்தில் மொத்தம் 7 முகூர்த்த நாட்கள் வருகிறது. கார்த்திகை மாதத்தில் முதல் முகூர்த்த நாட்கள் நவ.17ம் தேதியான இன்று வருகிறது. இதில் 6 முகூர்த்த நாட்கள் தேய்பிறை முகூர்த்த நாட்கள் ஆகும். ஒரே ஒரு வளர்பிறை முகூர்த்த நாள் மட்டுமே வருகிறது.


நவ. 17ம் தேதி – ஞாயிறு – தேய்பிறை முகூர்த்தம்


நவ.20ம் தேதி – புதன் – தேய்பிறை முகூர்த்தம்


நவ.21ம் தேதி – வியாழன் – தேய்பிறை முகூர்த்தம்


நவ.27ம் தேதி – புதன் – தேய்பிறை முகூர்த்தம்


நவ.28ம் தேதி – வியாழன் – தேய்பிறை முகூர்த்தம்


நவ.29ம் தேதி – வெள்ளி – தேய்பிறை முகூர்த்தம்


டிச. 5ம் தேதி – வியாழன் – வளர்பிறை முகூர்த்தம்