ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சொர்க்க பானை கொளுத்தும் நிகழ்ச்சி.
புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோபுரத்தில் தீபம் ஏற்றுதல் அதை தொடர்ந்து சொர்க்க பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தீபத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஆலயத்தில் இருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கோபுரத்தில் தீப்பந்தம் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து ஆலய வாசல் அருகே கார்த்திகை மாத சொர்க்கப் பானை ஏற்றும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அலங்காரவல்லி, சௌந்தர் நாயகியுடன் திருவீதி உலா காட்சி அளித்தார். அதை தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு கார்த்திகை மாத தீபத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத தீபத்திருநாள் நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் அருகே சங்கரன்மலை பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீசங்கரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சங்கரன் மலைபட்டியில் சௌந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மலை குன்றின் மேல் அமைந்துள்ள இந்த ஆலயம் ஆனது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.
மேலும், இக்கோயிலில் பொன்னர் சங்கர் திருமணம் நடைபெற்று வழிபட்ட கோயில் ஆகும். மலை குன்றின் உச்சியில் உள்ள இக்கோயிலில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. மலைகுற்றின் உச்சியில் சுமார் 600 லிட்டர் நெய்யும், 500 மீட்டர் தெரியும் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மகாதீபாரனை கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.
இதில் சங்கரன் மலைப்பட்டி சுற்றுலா ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரோகரா அரோகரா, ஓம் நமச்சிவாய என கோஷங்கள் முழங்க மகாதீபாரதனை கண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கார்த்திகை தீபங்களால் ஒளிர்ந்த கரூர்
கரூர் மாவட்டத்தில், திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீடுகள், கோயில்கள், கடைகள் தீபங்களால் ஒளி வீசின.
செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபத்திருநாள் என்று நேற்றைய தினம் பக்தர்கள் கோயில்களில் காலை 6:00 மணி முதல் குவிய தொடங்கினர். நேற்று கரூர் வெண்ணைமலையில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் உதவியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பின்னர் கோயில் கோபுரத்தின் மீது தீபம் ஏற்றப்பட்டது. சிவா சிவா என்ற கோசத்துடன் பக்தர்கள் தீபத்தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த சொர்க்க பானையை சிவாச்சாரியார்கள் தீபத்தை ஏற்றுக் கொளுத்தினர். இது போல் கரூர் மாரியம்மன் கோவில். கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அக்னீஸ்வரர் கோயில், நெரூர் காசி விஸ்வநாதர் கோயில், கடைகள், வீடுகள் போன்ற அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.