Karthigai deepam 2024: நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. தீப ஒளி திருநாளிற்கு பிறகு கொண்டாடப்படும் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக கார்த்திகை தீபம் இருக்கிறது. இந்துக்கள் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த விழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்.


திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நமது வீடுகளில் அகல்விளக்கு ஏற்றுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபம் நம்முடைய வீட்டில் தவறுகள் செய்யக்கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 


திருக்கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத தவறுகள் 


கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றாமல் கட்டாயம் இருக்கக் கூடாது. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது நீங்கள் வழிபாட்டு தலங்களுக்கோ அல்லது கோயில்களுக்கோ செல்பவர்கள் ஆக இருந்தால் கூட நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சொல்லி வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுவது உறுதி செய்ய வேண்டும். 


கார்த்திகை தீப வளங்களை தரும் திருநாளாக கருதப்படுகிறது. இருள் நீங்கி வாழ்வில் வெளிச்சம் தரும் விழாவாகவும் கார்த்திகை தீபம் பார்க்கப்படுகிறது. எனவே கார்த்திகை தீபத்தன்று முடிந்தவரை எக்காரணம் கொண்டும் கடன் வாங்கக்கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி கடன் வாங்குவது செல்வத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது. 


கார்த்திகை தீபத்தன்று அசைவம் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் நாட்டு கார்த்திகை கொண்டாடும்போது விருப்பப்படுபவர்கள் அசைவம் சாப்பிடலாம். ஒரு சிலர் பாரம்பரியமாக கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் நாட்டு கார்த்திகை அன்று, அசைவம் செய்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


கார்த்திகை தீபத்தன்று ‌விளக்கு ஏற்றுவது எப்படி ?


பிற நாட்களில் பல்வேறு திரிகளை பயன்படுத்தி நாம் வீடுகளில் விளக்கேற்றினாலும், திருக்கார்த்திகை தீபத்தன்று, வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி அல்லது தூய காட்டன் 3 யை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது மிக உத்தமகமாக பார்க்கப்படுகிறது. தாமரை மற்றும் வாழைத்தண்டு திரி கிடைக்காதவர்கள் தூய காட்டன் திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். 


எந்த எண்ணெயை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் ?


பசு நெய்யால் விளக்கேற்றினால் - மனம் ஒருமித்த வளமான வாழ்வு, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் - செல்வ வளம் செழிக்கும். விளக்கெண்ணெய் விளக்கேற்றினால் - புகழ் சேரும், வேப்ப எண்ணெய் விளக்கேற்றினால் - கணவன் மனைவி ஒற்றுமை.தேய்காய் எண்ணெய் - குலதெய்வ அருள், இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் - ஐஸ்வரியும் பெருகி, வீட்டில் மன நிம்மதி ஏற்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.