கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேக மற்றும் காய்கறி அலங்காரம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளை முன்னிட்டு மூலவர் கற்பக விநாயகருக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, பக்தர்கள் வழங்கிய 1000 கிலோ எடை கொண்ட காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தார். அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற காய்கறி அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
கரூர் அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவைய பிரதான ரங்கநாதர் சுவாமி உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு பட்டாடை உடுத்தி, ஆபரணங்கள் மற்றும் வண்ண மாலைகள் அணிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் அவைய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறினார். பின்னர் மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அவைய பிரதான ரெங்கநாத ஸ்வாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா காட்சி அளித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
கோடி அர்ச்சனை பெருவிழா தொடக்கம்.
கரூர் வராகி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை பெருவிழா தொடங்கியது. கரூர் பிரம்மா தீர்த்தம் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற சிம்பு சித்தி விநாயகர் மற்றும் வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகாதீப ஆராதனை நடந்தது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணிக்கு கோடி அர்ச்சனை பெருவிழா தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இந்த அர்ச்சனை வரும் 108 நாட்களிலும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வராகி அம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.