கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதி ஆவணி திருவிழாவின் 8 ஆம் திருவிழாவான மிகவும் பிரசத்தி பெற்ற, முத்திரிக் கிணற்றங்கரையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.

 

அய்யா வைகுண்டரின் தலைமை பதி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய 3 திருவிழாக்கள் 11 நாட்கள் கோலாகமாக கொண்டாடபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தினசரி காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப் படிப்பும், இரவு வாகனப் பவனியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 26 ஆம் தேதி 8 ஆம் நாள் விழாவான நேற்று இரவு மிக முக்கிய நிகழ்சியான அய்யா வைகுண்டசாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முந்திரி கிணற்றில் கலிவேட்டையாடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



 

தலைமை பதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க அய்யா வைகுண்டசாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் பெரும் திரளான மக்கள் படை சூழ ஊர்வலமாக வந்து கோவில் தலைமை குருக்கள் பாலா ஜனாதிபதி தலைமையில் முந்திரி கிணற்றில் கலிவேட்டையாடும் மற்றும் அம்பு விடும் நிகழ்சிகள் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். 11ஆம் நாள் திருவிழாவான வரும் 29ஆம் தேதி நண்பகலில் தேர்த்திருவிழா நடைபெறு.ம் விழா காலங்களில் நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்பிற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண