காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில், தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது.


விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம் ,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ தூதப் பெருமாள் சந்நிதி தெரு உட்பட நகரில்  பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 7 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.




விநாயகர் சிலை ஊர்வலம்


இதனையடுத்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் வழிபாடுகளும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதிக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் இந்து முன்னணி சார்பில் அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் மங்கள மேள வாத்தியங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் புறப்பட்டது.


போலீசார் பாதுகாப்பு


விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழாவிற்கு இந்து முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். ஊர்வலம் ரங்கசாமி குளத்திலிருந்து காஞ்சிபுரம் போலீசார் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி காந்திசாலை, காமராஜர்சாலை, கச்சபேசுவரர் கோயில், நான்கு ராஜா வீதி வழியாக வந்து சங்கர மேடம் வந்து நிறைவு பெற்றது. இதனையடுத்து அனைத்து விநாயகர் சிலைகளும், சிறு சரக்கு வேனில் இருந்தபடியே மாமல்லபுரம் கடற்கரைக்கு எடுத்து சென்று  கரைக்கப்பட்டது செய்யப்பட்டது.  






பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் வழக்கம் தொடங்கியது எப்போது ?


பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பால்ய திருமணங்களை தடை செய்யும் வகிலான சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது  பால கங்காதர திலகர் , பொதுமக்களை ஒன்று திரட்ட விநாயகர் சதுர்த்தியை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்காமல் பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாட செய்தார். அவ்வாறு பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், அவற்றை தனித்தனியாக சென்று ஆற்றிலோ குளத்திலோ கரைக்காமல், ஊர்வலமாக சென்று கரைக்கும் படி ஏற்பாடு செய்தார். 





முதல் முதலாக இந்த விநாயகர் சிலைகள் பால கங்காதர் திலகர் அறிவுரையின்படி , விநாயகர் சிலை பொது இடங்களில் வைக்க பல்வேறு , வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முதலாக  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நாளடைவில் வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைப்பதும், அனைத்து விநாயகர் சிலைகளும் ஒரே நேரத்தில் ஊர்வலமாக செல்வதும் அதிகரிக்கத் தொடங்கின. 


தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது தொடங்கியது எப்போது ?


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தாமதமாகவே பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான வழக்கங்கள் உருவாக தொடங்கின. 1982ல் இந்து முன்னணி அமைப்பு உருவான பிறகு, இந்துக்களே இந்து முன்னணி அமைப்பைக் கொண்டு செல்லவும், இந்துக்களை ஒன்றிணைக்கவும் வட இந்தியாவில் பால கங்காதர திலகரின் வழியை தமிழ்நாட்டிற்கு பின்பற்ற திட்டம் தீட்டினர். 







முதல் முதலாக தமிழ்நாட்டில், 1983 ஆம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் பொது இடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை வைப்பது அதிகரிக்க தொடங்கியது.