காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீர்த்த வாரி உற்சவத்தை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளப் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 

பின்னர் பிரணகதி வரதர் சுவாமி, அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் பிரணகதி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அனந்த சரஸ் திருக்குளத்தில் மூழ்கிய பிரணகதி வரதருடன் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். தீர்த்த வாரி உற்சவத்தை ஒட்டி அனந்த சரஸ் திருக்குளத்தில் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஏராளமான போலீசாரும் தீயணைப்பு திரையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 


வைகாசி மாத பிரம்மோற்சவம் ( Vaikasi Brahmotsavam 2023 Dates )


ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீநாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.


பிரம்மோற்சவ விழாவின் , ஆறாம் நாள் காலை தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். ( ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம்) இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மாலை யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.


ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல்  ஆகிய விழா நடைபெறுகிறது.


பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்


பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.


9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.