காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  சாமியை சுமந்து வலம் வரும் 50 - க்கும் மேற்பட்ட பாத தாங்கிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு ரங்கசாமிகுளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து கோவிலில் நிறைவடையும்.



காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ( kanchipuram varadaraja perumal temple )


 


காஞ்சிபுரம் : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிலும் உலகம் பிரசித்தி பெற்ற அத்திவரதர் விவோ நடைபெற்ற திருக்கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்ம உற்சவம் வெகுவிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி மாத பிரம்ம உற்சவம் கடந்த புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
 

காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  சாமியை சுமந்து வலம் வரும் 50க்கும் மேற்பட்ட பாத தாங்கிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு ரங்கசாமிகுளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து கோவிலில் நிறைவடையும்.

 

நீண்ட நேரம் கழித்து புறப்பட்டதால்

 


இன்று காலை சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதற்கு முன்பு அதிகாலை நம்மாழ்வார் சாத்துமுறை நடைபெற்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய உற்சவம் நேரம் கழித்து 8:30 மணி அளவில் கோவிலில் இருந்து புறப்பட்டது. நீண்ட நேரம் கழித்து புறப்பட்டதால், பாதம் தாங்கிகள் கடும் வெயிலில் சுவாமியை தூக்கி வலம் வருவது சற்று சிரமம் என்பதால், கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமி ரங்கசாமிகளும் கீரை மண்டபம் வழியாக மூங்கில் மண்டபத்தில் இருந்து பாதியிலேயே திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக சுவாமிக்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



" வெயில் மற்றும் காலதாமதமே "

 

மேலும் சாமியை தாங்கி வலம் வரும் பாதம் தாங்கிகள் எந்த ஒரு உபகரணங்கள் இல்லாமல் வருவதால், அவர்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் காலை மற்றும் மாலை வேலைகளில் சாலை சுத்தம் செய்தல், வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க வழியெங்கும் நிறைய தண்ணீர் அடித்து செல்வது வழக்கம், ஆனால் நேற்று முறையாக தண்ணீர் தெளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதம் தாங்கிகள் முழுமையாக உலா வராமல் பாதையிலே திரும்பியதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. முறையாக கழிக்கவில்லை என ஒருபுறம் கூறப்பட்டாலும், அதிகளவு வெயில் மற்றும் காலதாமதமே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

 


வைகாசி மாத பிரம்மோற்சவம் ( Vaikasi Brahmotsavam 2023 Dates )


ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீநாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.


பிரம்மோற்சவ விழாவின் , ஆறாம் நாள் காலை தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். ( ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம்) இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மாலை யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.


ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல்  ஆகிய விழா நடைபெறுகிறது.


பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்


பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.


9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.