காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அழகிய சிங்க பெருமாள் ஆகிய வைணவ திருக்கோயில்களில் எம்பெருமான் எழுந்தருளி உறியடி திருவிழா நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் கிருஷ்ணர் ஜெயந்தி விழா
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த நாளாம் கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு பஜனை மடங்களிலும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகள் உறியடி திருவிழாவுடன் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
அவ்வகையில் கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ தளங்களங்களான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அழகிய சிங்க பெருமாள் கோயில் ஆகியவற்றில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
காஞ்சி வரதராஜர் காலை கிருஷ்ணன் வேடத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இதேபோல் அழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மாலை 4 மணிக்கு கோபுர வாசலில் எழுந்தருள உறியடி விழா சிறப்பாக நடைபெற்றது. இதே போல் வரதராஜ பெருமாள் திருக்கோயில் மாலை 5 மணிக்கு கிருஷ்ணர் முன் செல்ல ஸ்ரீதேவி பூதேவியுடன் எம்பெருமான் தேசிகர் சன்னதியில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் திருவடி கோயில் அருகே எழுந்தருளி உறியடி திருவிழாவை கண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உறியடி திருவிழாவையும் கிருஷ்ணர் மற்றும் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்த பின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதேபோன்று பல்வேறு ராமர் மற்றும் கிருஷ்ணர் கோவில்களில் காஞ்சிபுரப் பகுதியில் உறியடி திருவிழா நடைபெற்றது.
பல்வேறு கிராமப் பகுதியில் இருக்கும் கோவில்களிலும் உறியடி திருவிழா நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு வருகின்ற ஒன்பதாம் தேதி வரை பல்வேறு கோவில்களில் உரியடி திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.