108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கார்த்திகை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து வந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பன்னீர் பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அத்திகிரி மலையில் இருந்து எடுத்துவரப்பட்ட கார்த்திகை தீப விளக்கை கொண்டு,தூப தீப ஆராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து கோவில் வளாகத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் முன்னிலையில் 15 அடி உயர சொக்கப்பனை ஏற்றி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவியுடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருக்கார்த்திகை உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் கூடி சுவாமி தரிசனம் செய்து வணங்கி விட்டு சொக்கப்பனை எரியும் நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கார்த்திகை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து வந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பன்னீர் பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அத்திகிரி மலையில் இருந்து எடுத்துவரப்பட்ட கார்த்திகை தீப விளக்கை கொண்டு,தூப தீப ஆராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து கோவில் வளாகத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் முன்னிலையில் 15 அடி உயர சொக்கப்பனை ஏற்றி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவியுடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருக்கார்த்திகை உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் கூடி சுவாமி தரிசனம் செய்து வணங்கி விட்டு சொக்கப்பனை எரியும் நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர்.