காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகவே, காஞ்சிபுரம் தென்னிந்தியாவின் ஆன்மீக நகரமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் நகரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. முக்தி தரும் ஏழு நகரங்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள்.


நகரேஷூ காஞ்சி


அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை ஏழு நகரங்களில் முக்தி தரும் நகரங்களாக இன்று மத நம்பிக்கைகள் தெரிகின்றன. இந்த நகரங்களில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தாலும், இந்த நகரத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் குளித்தாலும், கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் முக்தி தரும் ஏழு நகரங்களில் மொத்த நகரம் காஞ்சிபுரம் என அழைக்கப்படுகிறது நகரேஷூ காஞ்சி (நகரங்கள் சிறந்த நகரம் காஞ்சி) என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சிபுரம் உள்ளது. 


சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் நகரம் 


பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. அதே போன்று காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம் வைகுண்ட ராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என நூற்றுக்கு பெயர் பட்ட புகழ் பெற்ற கோவில்களும் உள்ளன. அந்த வகையில் காஞ்சி நகரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக, அந்த வகையில் காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில் இருந்து வருகிறது.


காஞ்சிபுரம் நகரீஸ்வரர் திருக்கோயில் - Kanchipuram Nagareeswarar Temple


காஞ்சிபுரம் அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில் மூலவர் சிலையாக இருக்கும் சிவபெருமானை புராண காலகட்டத்தில் தேவலோகத்தில் இருந்து வந்து இந்திரனால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது. இந்திரன் சிவபெருமானை நோக்கி இக்கோயிலில் , தான் செய்த பாவங்களிலிருந்து விடுபட சிவலிங்கத்தை பூஜை செய்து வந்ததாகவும் நம்பிக்கையாக இருந்து. மேலும் இங்கிருக்கும் சிவபெருமானை வணங்கி வந்த இந்திரனுக்கு பாவ விமோசனம் கிடைத்ததாகவும் புராண கதைகள் கூறுகின்றன. 


எனவே இங்கு இருக்கும் அருள்மிகு நகரீஸ்வரரை பூஜை செய்து வணங்கி வருபவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் சிவபெருமானை வணங்கி செல்கின்றன. கோயிலில் இருக்கும் சிவபெருமானை வணங்கி வந்தால் நிம்மதி கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.


முக்கிய பூஜைகள் நடைபெறும் நாட்கள் 


வழக்கமான பூஜைகள் தவிர, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, அன்னாபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


இக்கோயிலில் இருக்கும் மூலவர் பல்லவர்கள் காலத்து கட்டப்பட்டுள்ளன நம்பப்படுகிறது. தொடர்ந்து சோழர்கள் மற்றும் விஜயநகர ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.


நகரீஸ்வரர் பெயர் காரணம்


காஞ்சிபுரம் நகரத்தை உருவாக்குவதற்கு சிவபெருமான் காரணமாக இருந்ததாகவும் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே இந்த தளத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு நகரீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும், பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில் அமைவிடம் 


காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.