Arulmigu Mrityunja Nathar temple: உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தை பொருத்தவரை சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் 108க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் இருப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. 

மகா சிவராத்திரி - Maha shivaratri

சிவராத்திரி என்பது சிவன், சக்தியின் கூடலை கொண்டாடும் விழா என்று சொல்லப்படுகிறது. இந்துக்கள் மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில், கிருஷ்ண பக்‌ஷத்தில் இந்த சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

Continues below advertisement

சிவராத்திரி தினத்தன்று சிவபெருமான் கோயிலுக்கு செல்வது, சிறப்பு வாய்ந்து ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் குறித்து பார்த்து வருகிறோம். காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலுக்கு சென்றால், இரவா வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில் - Arulmigu Mrityunja Nathar temple

மிருகண்டு முனிவரின் மகனாக பிறந்த மார்க்கண்டேயர். மார்க்கண்டேயர் எதிர்காலம் குறித்த, அறிய அவரது தந்தை மிருகண்டு முனிவர் ஜோதிடம் பார்த்த போது, 16 வயதில் அவன் இறந்து விடுவான் என கூறப்பட்டது. இதனால் மிருகண்டு அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர் மார்க்கண்டேயர் நினைத்து தினமும் வருந்தி வந்த நிலையில், மார்க்கண்டேயர் நாட்டமெல்லாம் தினமும் சிவனை வழிபடுவதில் இருந்து வந்தது. 

மார்க்கண்டேயன் சிவபெருமானிடம் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். மார்க்கண்டேயர் உயிர் பிரியும் நாள் என்று, சிவ பூஜையில் தன்னை மறந்து, சிவ வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது எமது தூதர்கள் அவர் உயிரை எடுக்க முயற்சி செய்த பொழுது பலன் அளிக்கவில்லை.  

சிவபெருமான் மகிமைகள் :

எமதூதர்கள் சிறுவனின் உயிரை எடுக்க முடியாததால் வெறும் கையுடன் எமலோகம் திரும்பி சென்றனர். எமதர்மனிடம் முறையிட்டனர். இறுதியில் எமதர்மனே நேரில் வந்து பாச கயிறை வீசினான். அப்போது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தார். எமனின் பாச கயிறு, சிவலிங்கத்தின் மீது பட்டது ‌.

அப்போது சிவபெருமான் எமதர்மன் மற்றும் மார்க்கண்டேயன் ஆகிய இருவரு கண் முன்னே தோன்றி ஆசி வழங்கினார். என்றும் 16- வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ ஆசிர்வதித்தார். சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.

கோயில் கட்டியவர் யார் ?

பல்லவர் கால கோயிலாக இந்த கோயில் உள்ளது. பல்லவ மன்னர் ராஜசிம்மனால் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் சுவர் முழுவதும், சிற்பங்கள் நிறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் கம்பள தெரு பகுதியில் அமைந்துள்ள இந்த சிவப பெருமாள் கோயில், பெரும்பாலானோருக்கு அறியப்படாத கோயிலாகவே இருந்து வருகிறது.

சிற்பக் கலைக்காக இந்த கோயில் தொல்லியல் துறை ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒரு நாள் காஞ்சிபுரம் செல்லும் போது, இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.