காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வெள்ளி திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் வள்ளி, தெய்வயாணையோடு எழுந்தருளி காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தார் . 


குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி - kanchipuram kumarakottam temple


கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் வெள்ளி திருத்தேர் உற்சவமானது நடைபெறும். அந்த வகையில் இன்று ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 



மேலும் உற்சவமூர்த்தி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வள்ளி தேவானையுடன் நீளம் நிற பட்டுடுத்தி பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டது.




அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை‌ வணங்கி ஏராளமான பக்தர்களுடன் வெள்ளித் தேரினை கோவில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர். மேலும் அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை  பயபக்தியுடன்  சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.


தல வரலாறு


மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன்.




விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.




 
பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.