Kanchipuram kamakshi temple brahmotsavam: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், வருகின்ற மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் மார்ச் மாதம் நான்காம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் - Sri Kanchi Kamakshi Amman Temple
காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு என தனி அடையாளத்தை கொடுக்கின்ற கோயிலாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் இருந்து வருகிறது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
திருவிழா நகரம் காஞ்சிபுரம் - Festival City Kanchipuram
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து, சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறார். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே காட்சியளிக்கிறார். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு காமாட்சி அம்மன் காட்சியளிக்கிறார்.
காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்- Kanchipuram Kamakshi Amman Temple
காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்கள் இருப்பதால் காஞ்சிபுரத்தில், திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா விமர்சையாக கொண்டாடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை பார்ப்பதற்கு, நாள்தோறும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா, வருகின்ற மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் மார்ச் மாதம் 14ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது.
உற்சவம் நடைபெறும் நாட்கள்- Kamakshi Temple Brahmotsavam
மார்ச் மாதம் இரண்டாம் தேதி : பகலில் சண்டி ஓமம் நடைபெறுகிறது. இரவில் வெள்ளி மூஷிக வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.
மார்ச் மாதம் மூன்றாம் தேதி: காலை வெள்ளி விருஷபம். இரவில் தங்க மான் உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் நான்காம் தேதி: பகலில் மகரம் வாகனத்தில் உற்சவம் நடைபெறுகிறது. விரைவில் பிரசித்தி பெற்ற சந்திர பிரபை வாகனம்.
மார்ச் மாதம் ஐந்தாம் தேதி: தங்க சிம்ம வாகன உற்சவம் நடைபெறுகிறது. இரவில் யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் ஆறாம் தேதி: தங்க சூரிய பிரபை வாகனத்தில் காலை உற்சவம் நடைபெறுகிறது. இரவில் தங்கம் ஹம்ஸம் வாகன உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் ஏழாம் தேதி: தங்க பல்லாக்கு உற்சவம் காலையில் நடைபெறுகிறது. இரவில் நாக வாகன உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் எட்டாம் தேதி : பகலில் முத்து சப்பரம் உற்சவமும் இரவில் தங்க கிளி வாகன உற்சவமும் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி: காலையில் பிரசித்தி பெற்ற ரத உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் பத்தாம் தேதி: பத்ர பீடம் உற்சவம் காலையில் நடைபெறுகிறது. மாலையில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் பதினொன்றாம் தேதி : ஆல் மேல் பல்லாக்கு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இரவில் வெள்ளி ரதம் உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் 12ஆம் தேதி: காலையில் சரப உற்சவமும், மாலையில் கல்பகோத்யானம் நடைபெற உள்ளது.
மார்ச் மாதம் 13ம் தேதி : இரவில் தங்க காமகோடி விமான தரிசன உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் மாதம் 14ஆம் தேதி: காலை விஸ்வரூப தரிசனம் மற்றும் மாலையிலிருந்து விடையாற்றி உற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது.