Kanchipuram Ekambaranathar Temple Kumbabishekam 2025 Date: காஞ்சிபுரம் ஏலவார்க் குழலி உடனுறை, ஏகாம்பரநாதர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா டிசம்பர் 08 தேதி, காலை 5:30 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - Kanchipuram Ekambaranathar Temple
கோவில் நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில், சிவக்காஞ்சி பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் இருந்து வருகிறது. சிவபெருமானுக்குரிய பஞ்சபூத ஸ்தலங்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலத்திற்கான கடவுளாக பார்க்கப்படுகிறார். இக்கோவிலில் இருக்கும் சிவன் மணல் வடிவில் இருப்பதால், இக்கோவிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது. சர்வ சக்தி படைத்த பார்வதி தேவியால், இந்த சிவலிங்கம் பிரதிஷ்ட்டி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் - Kanchipuram Ekambaranathar Temple Kumbabishekam
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி காலை 9 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோ பூஜை, நவகிரக ஓமங்கள் நடைபெறுகின்றன.
மாலை 5 மணி அளவில், பிரவேசபலி, வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி (05-12-2025) - காலை 8 மணி அளவில் சாந்தி, திஷா மூர்த்தி ஹோமம், யாகசாலை நிர்ணயம் நடைபெற உள்ளது
மாலை 4:30 மணியளவில், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், யாக பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.
டிசம்பர் ஆறாம் தேதி (06-12-2025) - காலை 7:30 மணி அளவில் விசேஷ சந்தி, யாக பூஜை, பூர்ணாஹீதி
மாலை 4 மணியள விசேஷ சந்தி, யாக பூஜை, பூர்ணாஹீதி நடைபெற உள்ளது.
டிசம்பர் 7 ஆம் தேதி (07-12-2025) - காலை 8 மணி அளவில் விசேஷ சந்தி, யாகபூஜை, பூர்ணாஹீதி நடைபெற உள்ளது.
மாலை 4 மணியளவில் , விசேஷ சந்தி, யாக பூஜை,, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, பூர்ணாஹீதி நடைபெற உள்ளது.
டிசம்பர் 08 தேதி: மகா கும்பாபிஷேக விழா
அதிகாலை 3 மணி: விசேஷ சந்தி யாகபூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, பூர்ணாஹீதி நடைபெற உள்ளது.
காலை 5:45 மணி: அளவில், ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்கள் கும்பாபிஷேகம்.
காலை 6:30 மணி: அளவில் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம்
மதியம் 12 மணி: மகா அபிஷேகம்
மாலை 6 மணி : திருக்கல்யாணம் தொடர்ந்து, பஞ்சமூர்த்தி திருவீதி உலா
ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர் நிகழ்ச்சிகள்:
காஞ்சிபுரம் ஏகாம்நாதர் கோயிலுக்கு ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை சார்பில் புதிய தங்கத் தயார் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் ஆறாம் தேதி (06-12-2025) மாலை 3 மணி அளவில் தங்கரத வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமாட்சி காமகோடி பீடாதிபதிகள், காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் இருந்து தங்க ரதத்தை வடம் பிடித்து வெள்ளோட்ட விழாவை தொடங்கி வைக்கின்றனர்.
தங்கரத பிரதிஷ்டை மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 7 ஆம் (07-12-2025) தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. காலை 8 மணி அளவில் ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், புதிய தங்க ரதத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.