ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஸ்வாமி வெள்ளி ஹனுமந்த வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி திருவீதி உலா பல்வேறு வாகனங்களில் காட்சி தருகிறார்.


 




இந்நிலையில் நேற்று நடைபெற்ற சுவாமி திருவீதி உலாவில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி ஹனுமந்த வாகன அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா உற்சவர் திருவீதி விழாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.




 


மேலும், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் வருகின்ற 04.03.2023 சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 5.30 மணிக்குள் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உச்சவ நிகழ்ச்சி நடைபெற்று அதை தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி விழா நடைபெறுகிறது. மேலும் 06.03.2023 திங்கட்கிழமை அதிகாலை 05.15 மணி முதல் 05.45 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி அதை தொடர்ந்து காலை 09.15 மணி முதல் 09.45 மணிக்குள் திருத்தேர் பொதுமக்கள் முன்னிலையில் வடம் பிடித்து இழுக்கின்றனர்.


 


 




மேலும் அதைத் தொடர்ந்து வருகின்ற 08.03.2023 அன்று கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் இதிலேயே உள்ள தெப்பத்தில் தெப்ப தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி அருள் பெற வேண்டும் என ஆலய நிர்வாகிகள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் மாசி மாத திருத்தேர் மட்டும் தெப்பத் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பின் ஈடுபட்ட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.